Monday, June 5, 2017

பத்தாம் வகுப்பில் தேர்வு முடிவில் மாற்றம் : கிரேடு முறை குறித்து பேரவையில் முறைப்படி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பீடு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளி மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும். தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
முதற்கட்டமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் வழக்கமாக இருந்து வந்த நடைமுறை மாற்றப்பட்டு சிபிஎஸ்இ கல்வி முறையில் உள்ளது போல தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து பாடத்திட்டமும் சிபிஎஸ்இ போல கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை வடிவமைக்க வல்லுநர் குழுவை இன்று அல்லது நாளை பள்ளிக் கல்வித்துறை அறிவிக்க உள்ளது. இதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்பட உள்ளன. இது போல பல மாற்றங்கள் சட்டப் பேரவையில் கல்வி மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பாக வெளியாக உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் கிரேடுகள் வழங்கப்படுகின்றன.
அதே போல மாநிலப் பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். கிரேடு முறையில் வழங்கப்படும் புள்ளிகள் பற்றி விவரம் வருமாறு: மேற்கண்ட 9 பிரிவுகள் அல்லது 7 பிரிவுகளில் கிரேடுக்கான புள்ளிகள் வழங்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் உடனடியாக அந்த பாடங்களை எழுதுவதற்கு வசதியாக உடனடித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இது தவிர, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான செய்முறைத் தேர்வுகள் பிளஸ் 2 தேர்வின் போது மாணவர்கள் எழுத வேண்டும்.மேலும், தற்போது மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உள்ளது போல அடுத்த கல்வி ஆண்டில் பொறியியல் சேர்க்கைக்கும் நீட் தேர்வு வர உள்ளது.
அதனால் பிளஸ்1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் நீட் தேர்வுக்கான பாடப்பிரிவுகள் கண்டிப்பாக சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகள் சட்டப் பேரவையில் வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment