Friday, May 27, 2016

10ம் வகுப்பில் அதிக மார்க் பெற்றும் பிளஸ் 1ல் விருப்ப பாடம் இல்லை!

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1, பயோ -மேக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கு, குறைந்தபட்ச, கட்ஆப் மதிப்பெண்ணாக, 470 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக மதிப்பெண் பெற்றும் பல மாணவர்கள், விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில்பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது முதல்பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கைக்கு மாணவர்கள்,பெற்றோர் அலைமோதி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 300க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களே இடம் கிடைக்காமல் அலையும் நிலை இருந்தது. ஆனால்இன்றைய சூழலில், 400, 450க்கு மேல் எடுத்த மாணவர்களேவிருப்ப பாடம் கிடைக்கவில்லை எனஒவ்வொரு பள்ளியாக ஏறி இறங்கும் நிலை உருவாகியுள்ளது.
பயோ-மேக்ஸ்கம்ப்யூட்டர் சயின்ஸ்கலை பாடப்பிரிவுகளுக்கும் தற்போது அதிகப்படியான போட்டிகள் காணப்படுகின்றன. 470க்கும் அதிகமாக பெற்ற மாணவர்களுக்கு முதல் பிரிவும், 450க்கும் அதிகமாக பெற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு என தனியார் பள்ளிகள் வரையறை செய்துள்ளன. இதனால்அப்பள்ளிகளிலேயே பத்தாம் வகுப்பு படித்தும்நல்ல மதிப்பெண்கள் பெற்றும் விரும்பிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், 400க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலைப்பாடப்பிரிவு உறுதி செய்யப்பட்டு விட்டதால், 350 மற்றும், 300க்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எந்த துறைகளிலும் சேர முடியாமல்அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில்ஒரு பிரிவினர் வேறு வழியின்றி பாலிடெக்னிக் கல்லுாரிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சராசரி மாணவர்கள் சிக்கல்கள் இன்றி,கலைப்பாடப்பிரிவை தேர்வு செய்கின்றனர்.
பெற்றோர் தரப்பில் கிருஷ்ணவேணி என்பவர் கூறுகையில்என் மகள், 468 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால்அவர் இதுவரை படித்த பள்ளியில் விரும்பிய பாடப்பிரிவானபயோ-மேக்ஸ் கிடைக்கவில்லை. வேறு பிரிவை எடுக்ககட்டாயப்படுத்துகின்றனர். இதனால்வேறு பள்ளியை தேடி செல்கிறோம். நன்றாக படித்தும் பயனில்லை என்பது வேதனையாக இருக்கிறதுஎன்றார்.
தனியார் பள்ளி தலைமையாசிரியர் கீதா கூறுகையில்இன்றைய சூழலில், 400க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். பிளஸ் பாடப்பிரிவுகளில்இத்துறையில் இவ்வளவு மாணவர்கள் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. 
இதனால்அதிக மாணவர்களை ஒரே துறையில் அனுமதிக்க இயலாது. எனவேவேறு வழியின்றி மதிப்பெண் வரையறைப்படிமாணவர்களை சேர்க்க வேண்டியுள்ளது. ஆர்வத்துக்கு மதிப்பளிக்கும் வாய்ப்பில்லைஎன்றார்

No comments:

Post a Comment