Friday, June 10, 2016

10ம் வகுப்பு சான்றிதழ் அச்சிடும் பணி துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் அச்சடிக்கும் பணியை அரசுத்தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பிழைகளை சரிசெய்துகொள்ள தலைமையாசிரியர்களுக்கு இன்று மாலை வரை இறுதிவாய்ப்பு வழங்கப்பபட்டுள்ளது.

தமிழகத்தில்பதத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 25ம் தேதி வெளியிடப்பட்டுமாணவர்களின் நலன் கருதி பிளஸ்1 சேர்க்கைக்காகஇணையதளம் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் பெற்ற ஒரு சில மாணவர்கள்பெயரின் முதல் எழுத்துபெயர்பள்ளியின் பெயர்புகைப்படத்தில் பிழை இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில்அரசுத்தேர்வுத்துறை அசல் சான்றிதழ்களை அச்சடிக்கும் பணியை துவக்கியுள்ளது. எனவே பிழையின்றி சான்றிதழ்களை அச்சடிக்கும் பொருட்டுகடந்த, 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பிழை திருத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கியது.
அதன் படிஇன்று மாலைக்குள் தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக சான்றிதழை இணைத்துஉரிய பள்ளி பொறுப்பாளர்கள் மூலம் நேரடியாக ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment