Monday, July 18, 2016

10ம் வகுப்பு ’ஒரிஜினல்’ சான்று பள்ளிகளில் வினியோகம்

திருப்பூரில்அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், 10ம் வகுப்பு ஒரிஜினல் மதிப்பெண் சான்று,இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்தமே 25ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய மாணவ,மாணவியருக்குபள்ளிகளில், 90 நாட்கள் மட்டும் பயன்படும் வகையிலானதற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்பட்டது. இச்சான்றிதழை பயன்படுத்திமாணவ மாணவியர்பிளஸ் 1 வகுப்புகளில் சேர்ந்தனர்.
இதை தொடர்ந்துஇரண்டு தினங்களுக்கு முன்திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ,மாணவியருக்கான "ஒரிஜினல்&' மதிப்பெண் சான்றுகள்சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இவைதிருப்பூர் கே.எஸ்.சி.அரசு பள்ளியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுபள்ளிகள் வாரியாக பிரித்துதலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று (18ம் தேதி) முதல்பள்ளிகளில், 10ம் வகுப்பு மதிப்பெண் ஒரிஜினல் சான்று வழங்கப்படுகிறது;தேர்வெழுதிய மாணவமாணவியர் தங்களது பள்ளிகளுக்கு நேரில் சென்றுமதிப்பெண் சான்றை பெற்றுக் கொள்ளலாம். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்பள்ளிகளில்இன்று முதல் வரும் ஆக., 2ம் தேதி வரைவேலைவாய்ப்பு பதிவுக்கான முகாம் நடத்தப்படுகிறது. எனவேஒரிஜினல் மதிப்பெண் சான்று பெறும் மாணவமாணவியர் தங்களது கல்வி த்தகுதி பதிவை செய்துகொள்ளலாம். 
அதற்காக ஆதார் அட்டைரேசன் கார்டுமொபைல் போன் எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் வருமாறுமாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 தினங்களுக்கு இந்த பதிவு நடந்தாலும்சான்றிதழ் வழங்கப்படும் முதல் நாளான, 18ம் தேதியேமூப்பு தேதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.

No comments:

Post a Comment